உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 19, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
திருச்சி: துறையூரில், தமிழக சட்டசபை துணை சபாநாயகரை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய, அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துறையூர் எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், குறைகளை தெரிவிக்கச் சென்ற கார்த்திக் குமார் என்பவரை, சரமாரியாக தாக்கியுள்ளார்.
துணை சபாநாயகரை கண்டித்து, திருச்சி, துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க., சார்பில், நேற்று (நவ.,18) ஆர்பாட்டம் நடந்தது.
பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்த அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி உட்பட அ.தி.மு.க.,வினர் 25 பேர் மீது துறையூர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். கடந்த 10ம் தேதி, துறையூரில் ஆர்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 137 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.
