ADDED : செப் 10, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயில் அறங்காவலர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் தி.மு.க., நிர்வாகிகள். அரசியல் சார்புள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்கக்கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆஜரானார். அரசு தரப்பு, 'விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனம் நடந்தது,' என தெரிவித்தது. 'நியமன நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை இன்று ( செப்.,10) தாக்கல் செய்ய வேண்டும்,' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

