தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அமைச்சர் மீதான வழக்கு ரத்து

அமைச்சர் மீதான வழக்கு ரத்து

அமைச்சர் மீதான வழக்கு ரத்து


UPDATED : நவ 16, 2026 07:42 PM

ADDED : நவ 16, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:42 PM ADDED : நவ 16, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அனுமதியின்றி பேரணி நடத்தியதாக, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2025ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி, புதுக்கோட்டை பிருந்தாவன் அருகே இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து, பொது மக்களுக்கு இலவச பொருட்களை வழங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, பர்வேஸ் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக, புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அமைச்சர் பர்வேஸ் உள்ளிட்ட ஐந்து பேரும். சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us