அமைச்சர்கள் மீதான வழக்கு: பிப்.,5 முதல் உயர்நீதிமன்றம் விசாரணை
அமைச்சர்கள் மீதான வழக்கு: பிப்.,5 முதல் உயர்நீதிமன்றம் விசாரணை
ADDED : ஜன 08, 2024 04:15 PM

சென்னை: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டார் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்.,5 முதல் தினசரி பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மீதான மறு ஆய்வு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்.,5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு பிப்.,12, 13 தேதிகளிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்.,19 முதல் 22ம் தேதி வரையிலும் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் வழக்குகளால் மற்ற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு மேல் விசாரணை துவங்கும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை ஜன.,30ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.