ADDED : ஏப் 05, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தி.மு.க., - எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன் மீதான கொரோனா விதிமீறல் வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது, தேனி மாவட்டம் சங்கராபுரம், போடி உள்ளிட்ட ஊர்களில், கடந்த 2021ம் ஆண்டு பிப்., 21ல், கொரோனா விதிகளை மீறி, தி.மு.க., சார்பில் இரு சக்கர பேரணி நடத்தியதாக, தங்கத் தமிழ்செல்வன் உள்ளிட்டோருக்கு எதிராக, போடிநாயக்கனுார் ஊரக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தங்கத் தமிழ்ச்செல்வன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

