ADDED : மார் 12, 2024 02:23 AM
கருப்பூர்: சேலம் மாவட்டம், மூங்கில்பாடி லட்சுமி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், தன் மனைவி ஹரிஷா, 21, உடன் பைக்கில் மார்ச் 8 இரவு, 7:30 மணிக்கு கருப்பூர் நோக்கி சென்றார்.
தேக்கம்பட்டி அருகே பைக் சென்ற போது, சாலையில் காரை நிறுத்தி, வி.சி., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக உள்ள வெள்ளாளப்பட்டி செண்பக அரசன், 37, அவரது நண்பர்கள் துரை, ரஞ்சித்குமார், விஜய் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்.
அவ்வழியே சென்ற கோவிந்தராஜ், பைக்கிற்கு வழிவிடும்படி கேட்ட போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த செண்பக அரசன் தலைமையிலானவர்கள், ஹரிஷாவை தாக்கியதோடு, ஆடையை இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்தனர்.
கருப்பூர் போலீசார், செண்பக அரசன், துரை, ரஞ்சித்குமார், விஜய் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் பிரிவுகளில், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
அதுபோல, செண்பக அரசன், தன்னை கோவிந்தராஜ் மற்றும் நண்பர்கள் கொலை செய்ய முயற்சித்ததாக புகார் அளித்தார். அவர்கள் மூவர் மீதும் கருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்துள்ளனர்.

