தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஏரியில் மணல் அள்ளிய விவகாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு மீது வழக்கு

 ஏரியில் மணல் அள்ளிய விவகாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு மீது வழக்கு

 ஏரியில் மணல் அள்ளிய விவகாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு மீது வழக்கு


ADDED : செப் 27, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 10:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலப்பம்பாடி ஏரியில், சட்டவிரோதமாக மணல் எடுத்து, அரசுக்கு, 8.22 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் புகாரில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு, 75, அவரது மகன் குமரன், 48 மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த, 2025 டிசம்பர், 14ல், திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி என்ற கிராமத்தில், 124 ஏக்கரில், தி.மு.க.,வின் வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது.

இந்த நிலம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுவின் மகனும், அருணை பொறியியல் கல்லுாரி துணை தலைவருமான குமரனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

தி.மு.க., மாநாட்டிற்கான ஏற்பாடுகளை வேலு செய்தார். மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டவிரோதம் இதுகுறித்து, அறப்போர் இயக்க நிர்வாகிகள், சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

மலப்பம்பாடி ஏரி, 70.65 ஏக்கர் பரப்பளவு உடையது. வேலுவின் அரசியல் செல்வாக்கு காரணமாக, இந்த ஏரியில் இருந்து, சட்டவிரோதமாக, 12 ஏக்கர் பரப்பளவில், 23 அடி ஆழம் வரை மண் அள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு, 8.22 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேலுவின் மகன் குமரன், கடந்த 2025 அக்., 31 மற்றும் நவ., 27ம் தேதிகளில், பள்ளியம்பட்டு ஏரியில் இருந்து, களிமண், வண்டல் மண் அள்ள, இணையவழியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், குமரனின் நிலத்திற்கும், இந்த ஏரிக்கும், 750 மீட்டர் தொலைவு இருப்பதால், நிலத்திற்கு அருகே உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மண் அள்ளி உள்ளனர்.

நிலத்தை சமன்படுத்தவும், வேலு மற்றும் குமரன் ஆகியோரின் குடும்ப சொத்துக்கான அணுகு சாலையை விரிவுப்படுத்தவும், இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுதொடர்பாக, வேலு, குமரன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தனி நபர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலு மீது ஏற்கனவே, அவர் பதவி வகித்த நெடுஞ்சாலை துறையில், 3.23 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர் தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தி.மு.க., சட்டசபை கொறடாவாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us