ADDED : ஜன 13, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து, முதல்வர் ஸ்டாலின், மேலுார் மக்களுக்கு துணையாக நிற்கிறார். மக்கள் நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று உறுதியுடன் கூறிய தைரியமுள்ள ஒரே முதல்வர் ஸ்டாலின்.
ஆனால், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போன்றோர் வதந்தி பரப்புகின்றனர். டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய மேலுார் உட்பட, 48 கிராமங்களை சேர்ந்த, 5,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாகவும் சிலர் அரசியல் செய்ய முயற்சி செய்தனர். அதற்கு முன், 5,000 பேர் மீதான வழக்கை ரத்து செய்து முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மூர்த்தி
பத்திரப்பதிவு துறை அமைச்சர்