உள்ளடக்கத்திற்கு செல்ல
சாலைகளில் உள்ள ஜாதி பெயர் நீக்கம் ஆணையம் உத்தரவு
சாலைகளில் உள்ள ஜாதி பெயர் நீக்கம் ஆணையம் உத்தரவு
ADDED : செப் 29, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
சென்னை:'நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள், நீர்நிலைகள் மற்றும் கிராம பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கும் வகையில், முந்தைய தி.மு.க., ஆட்சியில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சாலைகள், நீர்நிலைகள், கிராம பெயர்களில் உள்ள ஜாதி அடையாள பெயர்களை நீக்கி விட்டு, மறு பெயரிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
