UPDATED : ஆக 10, 2024 04:12 PM
ADDED : ஆக 10, 2024 02:28 PM

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போது சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து பொன்.மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டார் என அதே பிரிவில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 ல் வழக்கு தொடர்ந்தார். இதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் 2023ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டிற்கு வந்த சி பிஐ அதிகாரிகள் சுமார் 7.5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது ஓராயிரம் வழக்குகள் உள்ளன. சாகும் விசாரணை நடக்கும். ஓய்வு பெற்ற பிறகும், சிலைகள் மாயம் குறித்து புகார் அளித்து வருகிறேன். என்னிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து உதவி உள்ளேன். உங்களின் நேர்மையில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தபடி சிபிஐ அதிகாரிகள் வந்தனர். நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் ஒரு குற்றவாளியை கூட கைது செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.