சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் மே 20க்கு பிறகு வெளியாகும்
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் மே 20க்கு பிறகு வெளியாகும்
UPDATED : மே 05, 2024 06:51 AM
ADDED : மே 05, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 2024 ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் மே மாதம் 20க்கு பின் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும் அன்றே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.cbse.gov.in என்ற இணையதளத்திலும், சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.cbse.nic.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டில் நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் தேர்வினை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது