ADDED : பிப் 23, 2024 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனு இலங்கை செல்ல மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
நேற்று அனுமதி அளித்த உத்தரவின் நகல் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனை அடுத்து
திங்கள் அல்லது செவ்வாய் கிழமை சாந்தனு இலங்கை செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை செய்யப்பட்டு உள்ள சாந்தனு உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.