கச்சத்தீவை மீட்க வக்கில்லாத மத்திய அரசு: அமைச்சர் சர்ச்சை பேச்சு
கச்சத்தீவை மீட்க வக்கில்லாத மத்திய அரசு: அமைச்சர் சர்ச்சை பேச்சு
ADDED : பிப் 04, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: 'கச்சத்தீவை மீட்க வக்கில்லாதது மத்திய அரசு 'என மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
ராமநாதபுரத்தில் மீன்வளத்துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
மீனவர்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் பிரதமர் ராமேஸ்வரம் வந்தார். அவரிடம் மீனவர்களாகிய நீங்கள் உங்கள் படகுகளை இலங்கையிடமிருந்து மீட்டுத்தரவும், கச்சத்தீவை மீட்கவும் கேட்டிருக்க வேண்டியது தானே. அவற்றை மீட்க மத்திய அரசுக்கு வக்கில்லை. இந்தியாவின் தரம் உயர வேண்டுமானால் 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.