நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை
நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை
ADDED : ஜன 13, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும் என தான் நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலை தளபக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழ்நாடு அடுத்தடுத்து சந்தித்த இரு வேறு பேரிடர்களில் இருந்து மீள்வதற்கு தேவையான நிதி வழங்க வலியுறுத்தி நமது அனைத்து கட்சி எம்.பி.,க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (13-ம் தேதி) நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் மத்திய அரசு சார்பில் குழுக்களும் வந்து பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் நமது கருத்துக்களை உள்வாங்கி உரிய நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம் என பதிவிட்டு உள்ளார்.