தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்


ADDED : ஜன 31, 2025 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்காக புதிதாக சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, கூடுதல் திறமைகளை வளர்ப்பதற்கான, சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இணையவழி சான்றிதழ் படிப்பை, பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தின் வாயிலாக, பள்ளி வேலைநேரம் முடிந்தபின், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக இணையவழியில் நடத்த உள்ளது. இதில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

வணிக திறன்கள், மொழி மற்றும் தொடர்பு திறன், தகவல் தொழில்நுட்ப திறன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நுண்திறன்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், பாடம் சார்ந்த கல்வி, வாழ்க்கைக்கல்வி உள்ளிட்ட பாடங்களில், மாணவர்கள் பயிற்சி பெறலாம்.

இப்படிப்புகளை ஒருங்கிணைத்து வழங்கும் பொறுப்பை, மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும். அவர்கள், ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆர்த்தி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us