ADDED : செப் 08, 2026 03:28 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில், 9 செ.மீ., மழை பதிவானது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலையால், இயல்பை விட 5 டிகிரி செல்ஷியஸ் வரை, வெப்பம் கூடுதலாகப் பதிவானது.
தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக, 0.9 கி.மீ., உயரத்தில், காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், இன்று, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
