ADDED : அக் 16, 2024 05:13 AM

சென்னை: தமிழகத்தில், இன்று(அக்.,16) காலை 7 மணி வரை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில், இன்று காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில், மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 440 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ., கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.