ADDED : மார் 01, 2026 05:45 AM

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
அதன் அறிக்கை:
தென் மாநில பகுதிகளில் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங் களில், நேற்று லேசான மழை பெய்தது.
அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில், 6 செ.மீ., மழையும், தேனி மாவட்டம் சோத்துப்பாறையில், 5 செ.மீ., மழையும் பதிவானது.
இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
மேலும், நாளை முதல் வரும் 4ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் காணப்படும். சென்னையில் இன்று, வானம் மேகமூட்டத்துட ன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

