தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
ADDED : டிச 31, 2024 02:12 PM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.,31) முதல் ஜன., 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.,31) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதேபோல், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.,31) முதல் ஜன., 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.