UPDATED : ஜன 07, 2024 11:06 PM
ADDED : ஜன 07, 2024 09:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருப்பதாவது: சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (08 ம் தேதி) காலை 8.30 மணி வரையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, நந்தனம்,எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே நாளை(ஜனவரி-8 ல்) தேர்தல் கமிஷன் ஆலோசனை சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை எச்சரிக்கை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.