தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு

நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு

நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு


ADDED : ஜூலை 07, 2025 05:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 05:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக படத்தின் பதிப்புரிமை பெற்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆவண பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, ஆவணப்படமாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து 2024ல் 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியிட்டது. இதில் நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. தன் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் படக் காட்சிகளை பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே அதே ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, 'சந்திரமுகி' படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் நஷ்டஈடு வழக்கு உள்ள நிலையில், மேலும் ஒரு நஷ்டஈடு வழக்கு வந்துள்ளதால், நயன்தாரா தரப்புக்கு தலைவலி அதிகமாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us