ADDED : செப் 29, 2025 01:42 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பிரசாரப் பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த ஜூலை 7 முதல், தொகுதி வாரியாக, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் மழை காரணமாக, நாமக்கல் பிரசாரத்தை அக்., 4, 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே, கரூர் துயர சம்பவம் காரணமாக, நேற்றைய பிரசார பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக, இன்று தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளிலும், நாளை பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளிலும் பிரசாரம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அந்த பிரசார பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் அக்., 2; பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில் அக்., 3; நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், பரமத்தி வேலுார் தொகுதிகளில் அக்., 6ம் தேதி பிரசார பயணம் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் அக்., 5ல் நடப்பதாக இருந்த பிரசார கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.