உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 19, 2026 11:34 PM
ADDED : நவ 19, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே காங்கிரஸ் செயலராக, மயூரா ஜெயகுமார், திருப்பூர் கோபிநாத், லீடர் அறிவழகன், ராஜ்யசபா எம்.பி., கிறிஸ்டோபர் ஆகியோர் இருந்தனர்.
இவர்களில் மயூரா ஜெயகுமார், கேரளா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த செந்தமிழ் அரசு, அந்தமான் நிக்கோபர் தீவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிவேதித் ஆல்வா, ஜங்கா கவுதம், வெங்கடேஸ்வர் ஆகியோர், தமிழகம் மற்றும் புதுச்சேரி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
