sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குருவாயூர், தேஜஸ் உட்பட 10 ரயில் சேவையில் மாற்றம்

/

குருவாயூர், தேஜஸ் உட்பட 10 ரயில் சேவையில் மாற்றம்

குருவாயூர், தேஜஸ் உட்பட 10 ரயில் சேவையில் மாற்றம்

குருவாயூர், தேஜஸ் உட்பட 10 ரயில் சேவையில் மாற்றம்


ADDED : அக் 30, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரயில் பாதை பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், மதுரை - எழும்பூர் தேஜஸ், குருவாயூர் - எழும்பூர் உட்பட, 10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிக்கை:

நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர்கோவில் விரைவு ரயில்கள், வரும் 1, 6, 8, 11, 13, 15ம் தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில், வரும் 1, 9, 11, 15ம் தேதிகளில், திருச்சி, காரைக்குடி, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால், திண்டுக்கல், மதுரை செல்லாது

நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா ரயில், வரும் 1, 8, 15ம் தேதிகளில், விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது

குஜராத் ஓக்ஹா - ராமேஸ்வரம் விரைவு ரயில், வரும் 4, 11ம் தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், திண்டுக்கல், மதுரை செல்லாது

மதுரை - ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் விரைவு ரயில், வரும் 6, 13ம் தேதிகளில் மாற்றுப்பாதையில் செல்வதால், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது

நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., ரயில், வரும் 11ம் தேதி மட்டும் மாற்று பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது

குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி ரயில், வரும், 10ம் தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது

உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் - கன்னியாகுமரி விரைவு ரயில், வரும் 9ம் தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், திண்டுக்கல், மதுரை செல்லாது

மதுரை - எழும்பூர் தேஜஸ் விரைவு ரயில், வரும் 1, 8, 11, 15ம் தேதிகளில், 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us