sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செல்லமே: எந்தெந்த பிரீடு என்ன குணம்?

/

செல்லமே: எந்தெந்த பிரீடு என்ன குணம்?

செல்லமே: எந்தெந்த பிரீடு என்ன குணம்?

செல்லமே: எந்தெந்த பிரீடு என்ன குணம்?


UPDATED : மார் 09, 2024 10:52 AM

ADDED : மார் 09, 2024 03:54 AM

Google News

UPDATED : மார் 09, 2024 10:52 AM ADDED : மார் 09, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு பிரீட் நாய்க்கும் வெவ்வேறு குணம் இருந்தாலும், வளர்க்கற முறையில அதோட இயல்பை மாத்திட முடியும் என்கிறார் பிரீடர் பாலன்.

கோவை, பேரூரைச் சேர்ந்தவர் பாலன்,70. இவர், கோவை மாவட்ட, போலீஸ் மோப்பநாய் பிரிவில், 44 ஆண்டுகளாக நாய்களுக்கு பயிற்சி அளித்தவர். பணி ஓய்வுக்கு பின், 'பெட் ஷாப்' ஓனராகவும், பிரீடராகவும் இருப்பதால், நாய்களின் சைக்காலஜி பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

நாய்களில் 150 வகை இருக்கு. இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு குணம் இருந்தாலும், வளர்க்கும் முறையில், நமக்கு ஏற்றாற்போல மாற்றி கொள்ளலாம். வீட்டில் வளர்க்கும் நாய்கள் கீழ்படிதலோடும், மோப்ப நாய்களை புத்திசாலித்தனம், சுறுசுறுப்பாக இருக்குமாறும் பயிற்சிகள் வழங்கலாம்.

பப்பிகளுக்கு மூன்று மாதங்களானால்தான் நாம் சொல்வதே புரியும். வீட்டிலுள்ளோரிடம் பேசுவது போலவே, நாம் அவைகளை பழக்கப்படுத்தலாம். ஓனர் என்ன சொன்னாலும் நாய்கள் கீழ்படியும். அடித்தால் கூட மறந்துவிட்டு பாசத்தோடு வாலை ஆட்டிக்கொண்டே சுற்றி வரும்.

Image 3571197


ஆனால், ஒரு நாய் இருக்குமிடத்தில் வேறு செல்லப்பிராணியையோ அல்லது குழந்தையையோ கொஞ்சிவிட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்தால், ஈகோ வந்துவிடும். அவை 'ஸ்ட்ரஸ்'ஆக இருக்கும் போது, ஆக்டிவிட்டியில் வித்தியாசம் தெரியும். யாரையாவது கடிப்பது, அமைதியாக மூலையில் இருப்பது, வாலை ஆட்டாமல் தலையை கீழே போட்டுக்கொள்வது என கோபத்தை வெளிப்படுத்தும். அப்போது, அவை ஓனரின் அரவணைப்பை எதிர்பார்க்கும். பப்பியை கொஞ்ச ஆரம்பித்துவிட்டால் அழுது கொண்டே, நாக்கால் முகத்தை நக்கி ஹக் கொடுத்துவிடும். ஒரு பப்பி வளர்த்தால் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது, என்றார்.

 பொமேரியன்: அடிக்கடி மூட் மாறும். சில சமயங்களில் ஓனரையே கடித்துவிடும். வீட்டுக்கு யார் வந்தாலும், உடனே காட்டி கொடுத்துவிடும்.

 டாபர்மேன்: இதோட ஆக்டிவிட்டி ரொம்ப ஸ்பீடா இருக்கும்.

 ஜெர்மன் ஷெப்பர்டு: இந்த பிரீட்டோட அழகே முடிதான். குடும்ப சூழலில் வளர்க்க ஏற்ற பிரீட்.

 சிட்சூ: பார்க்க பொம்மை மாதிரி அழகா இருக்கும். அமைதியா, என்ன சொன்னாலும் கீழ்படியும்.

 ராட்வீலர், லேப்ரடர்: இவை உருவத்தில் பெரிதாக இருந்தாலும், குழந்தை குணம் கொண்டது.

சம்மருக்கு 'கூல் டாய்ஸ்'


அடிக்கிற வெயிலுக்கு காலையிேலயே சோர்ந்து போய் படுத்துக்குற உங்க வீட்டு செல்லப்பிராணியை குஷிப்படுத்துறதுக்கு, நிறைய டாய்ஸ், பெட் ஷாப்ல கிடைக்குது.

கூலிங் போன்: பிரிட்ஜ்ல வைத்து மதிய நேரத்துல, கூலிங் 'போன்' பொம்மைய கொடுத்தா, உங்க பெட் ஜாலியாக விளையாடும். இது பாக்குறதுக்கு எலும்பு மாதிரியே இருக்கறதால, கடிச்சு கடிச்சு குஷியாகிடும்.

கூலிங் ஸ்பான்ச்: ஆரஞ்ச், தர்பூசணி மாதிரி வடிவங்களில் இந்த ஸ்பான்ச் கடைகளில் கிடைக்குது. தண்ணீல நனைச்சு, இதை கொடுத்துட்டா ஹேப்பியா குதிச்சு விளையாடும்.

கூலிங் பவுல்: இந்த பவுல்ல தண்ணீர் ஊற்றி, ப்ரீசர்ல வைச்சிட்டா, ஐஸ்கட்டியா மாறிடும். இதை, மதிய நேரத்துல செல்லப்பிராணியோட பக்கத்துல வைச்சிட்டா, ஐஸ்கட்டி கரையற வரைக்கும், சின்ராச கையிலயே புடிக்க முடியாது.

என்னோட 'கூப்பரு' எப்பவுமே சூப்பரு!


பொறந்து மூணு வயசு தான் ஆகுது. ஆனா குறும்புக்கு பஞ்சமில்லை. இவனோட குட்டி ரியாக்ஷன்களை போட்டோக்களால் நிரப்பி இருக்கேன் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி சத்யா.

'' கோரைப்பல் தான் கூப்பரோட அழகு. வீட்டுல சண்டை வந்தா பஞ்சாயத்து பண்றது, சோகமா இருந்தா சேட்டையால என்னோட மூட மாத்துறதுன்னு, கூப்பரோட குறும்புகளை அடுக்கிக்கிட்டே போகலாம். என்னோட டிரஸ் கலர்ல அவனுக்கும் டிரஸ் வாங்குறது வழக்கம். வெளியிடங்களுக்கு போனா, டிரஸ் இல்லாம கிளம்ப மாட்டான். அவனுக்கு, 'ப்ரீஸ்', 'புரோஸ்', 'ஸ்டே', 'ஹக்'ங்கற வோர்ட்ஸ், சொல்லி கொடுத்துருக்கேன் . போட்டோ எடுக்கும் போது, 'கூப்பர்... போஸ்!, ஸ்டே!'ன்னு சொன்னா, அப்படியே இருப்பான். க்யூட்டா போஸ் கொடுப்பான். சமீபத்தில், பீச்ல அவனோட போட்டோ ஷூட் நடத்துனேன். ரொம்ப கூலா போஸ் கொடுத்தான். தண்ணிய கண்டா குதிச்சி ஆட்டம் போடுவான். போட்டோ ஷூட் முடிஞ்சதும், நானும், கூப்பரும் அலையோட உருண்டு, மணல்ல புரண்டு விளையாடினோம்,'' என்றார், பெருமிதமாக...

கூப்பரு, நீ ரொம்பவே கொடுத்து வச்சுருக்க போல...

உயிருடன் இருப்ப து போன்ற உணர்வு


செல்லப் பிராணிகள் உயிரோடு உறவாக கலந்துவிட்ட பந்தம் என்றால் மிகையல்ல. செல்லப்பிராணிகளின் மறைவு, பிரிவு என்பது, அதை செல்லமாய் பார்த்துக் கொண்டோரின் மனதை மிக ஆழமாகவே வருந்த செய்கிறது. அந்த பிரிவின் வலியாற, சில மாதங்கள் கூட பிடிக்கிறது. இந்த பிரிதல் உணர்வு, ரணம் தராமல் இருக்க, உயிரோவியம் மூலம் நிவாரணம் தேடிக் கொள்கின்றனர், செல்லப்பிராணி வளர்க்கும் பலர். ஓவியக்கலையில் பிரபலமாகி வரும், 'ைஹபர் ரியாலிஸ்டிக் போர்ட்ரெய்ட்ஸ்'(தத்ரூப உருவப்படங்கள்) எனப்படும் ஓவியங்கள் தான், இப்படியான உயிரோட்ட நினைவுகளை அவர்களுக்கு தருகிறது. செல்லப் பிராணியின் தத்ரூப ஓவியத்துடன், தாங்கள் இருப்பது போன்ற ஓவியங்களை வரைந்து, வீடுகளின் சுவர்களில் மாட்டிவைத்துக் கொண்டு ரசிப்போரும் பலர்.

Image 1242314


''செல்லப்பிராணி உயிருடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை என்னிடம் வழங்கி விடுவர்; அதோடு கொஞ்சி மகிழ்வது போன்று விதவிதமான 'போஸ்'களில் தத்ரூப ஓவியங்களை வரைய சொல்வர்; நானும் வரைந்து கொடுப்பேன். இதன் மூலம் தங்கள் செல்லப்பிராணி உயிரோடு இருப்பதை போன்றே பலரும் உணர்கின்றனர் என்பது தான் ஆச்சர்யம் தரக்கூடிய விஷயம்'' என்கிறார், இந்த வகை ஓவியங்களை வரைவதில் தேர்ச்சி பெற்ற திருப்பூரைச் சேர்ந்த சிவபாலன்.

நானும் 'ஜாக்'கும்!


என்னதான் வீட்டிற்கு காவலாக இருந்தாலும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் சந்தோஷத்தில் முத்தமிட்டு அன்பாக வரவேற்பான் எங்க 'ஜாக்' என்கிறார், கோவையை சேர்ந்த ஷனா தியா

எங்க வீட்ல லியா, லியோ, ஜாக் என மூன்று பெட் இருக்கு. அதில் ஜாக் தான் ரொம்ப சுட்டி. ஒரு இடத்துல இருக்க மாட்டான். வீட்டில் ஒரு 3 வயது குழந்தை இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இவன் வீட்டில் இருந்தால் சொன்னதையெல்லாம் கேட்பான். அதே மாதிரி புதுசா யாராவது வீட்டிற்கு வந்தால் விட மாட்டான். வீட்டுக்கு ரொம்பவும் பாதுகாப்பாகவும், பழக்கப்பட்டவர்களிடம் அன்பாகவும், சுட்டியாகவும் இருப்பான்.

காருக்குள் ஆபத்து கவனமா இருங்க


வெயிலின் தாக்கத்தால் செல்லப்பிராணிகளுக்கு, 'ஹீட் ஸ்ட்ரோக்' வரும். அதோட உடல் வெப்பநிலை, 43 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்தால், இளைப்பு வாங்குதல், மூச்சுவிட திணறுதல், நுரையாக சலைவா வெளியேற்றுவது போன்ற அறிகுறிகளால், ஹீட் ஸ்ட்ரோக் இருப்பதை அறியலாம். வாயின் உட்பகுதியில் உள்ள ஈறுகளில், அடர் சிவப்பு, பர்ப்பிள், ப்ளூ, கிரே நிறங்களில் தோல் மாறி இருத்தல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் மூலம், அதிகப்படியான வெப்பத்தால், நாய்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்யலாம். அப்போது மருத்துவரிடம் அழைத்து செல்வது அவசியம்.

நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு, அதிகாலை, மாலை வெயிலுக்கு பின், நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லுதல், மதிய வேளைகளில் உணவை தவிர்த்து, அதிக தண்ணீர் கொடுப்பது, விதையில்லாத தர்பூசணி, ஆரஞ்ச், வெள்ளரிக்காய், வாழைப்பழம் தருவதால், உடல் வெப்பநிலையை சமப்படுத்தலாம். பொதுவாக வெயில் காலங்களில், காரில் செல்லப்பிராணிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, கடைகளுக்கு செல்வதாக இருந்தால், உடன் அழைத்து செல்ல வேண்டும். காருக்குள்ளே நீண்டநேரம் அவை இருந்தால், காரின் உள் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் அதிகரிப்பதால், செல்லப்பிராணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்..

- டி.பிரபாகரன்,

அரசு கால்நடை மருத்துவர் கோவை.






      Dinamalar
      Follow us