UPDATED : டிச 12, 2024 01:22 PM
ADDED : டிச 12, 2024 08:38 AM

சென்னை: கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.50 அடியை எட்டி உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு 2,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், 'சாத்தனூர் அணையின் நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும்' என வருவாய் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்!
கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து 3,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
மொத்த உயரம்:24 அடி
மொத்த கொள்ளளவு: 3645 மில்லியன் கன அடி
நீர்வரத்து: வினாடிக்கு 713 கன அடி
நீர் வெளியேற்றப்படும் அளவு- 134 கன அடி
தற்போதைய நீர்மட்டம்: 22 அடி