தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை; பணி முடிக்க காலக்கெடு நீட்டிப்பு

 சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை; பணி முடிக்க காலக்கெடு நீட்டிப்பு

 சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை; பணி முடிக்க காலக்கெடு நீட்டிப்பு


ADDED : ஜூலை 07, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 11:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை - கர்நாடகா மாநிலம் பெங்களூரு இடையே, இரு நகரங்களை இணைக்கும் வகையில், 'எக்ஸ்பிரஸ் ஹைவே' எனப்படும் அதிவிரைவு சாலை அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 7,800 கோடி ரூபாய் செலவில், இந்த ஆறுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கான திட்டப் பணிகளை மேற்கொள்ள, 2012ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 263 கி.மீ., துாரம் உள்ள இந்த விரைவு சாலையில், இதுவரை, 230 கி.மீ., துாரம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த 2024 மார்ச்சில் பணிகள் முடிக்க முடிவு செய்யப்பட்டது; பின், 2025 ஆகஸ்ட்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இன்னும் பணிகள் முடியாததால், வரும் அக்டோபரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அரக்கோணம் - காஞ்சிபுரம் இடையே, 25 கி.மீ., துார பணிகளை முடிப்பதில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், தாமதம் ஏற்பட்டு வருகிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us