மழையில் மிதக்கும் சென்னை: தமிழக அரசின் உறுதிமொழிகள் என்னாச்சு?
மழையில் மிதக்கும் சென்னை: தமிழக அரசின் உறுதிமொழிகள் என்னாச்சு?
ADDED : டிச 01, 2023 10:37 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
சில நாட்களாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. பல இடங்களில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சென்னையில் கனமழை பெய்தாலும் தண்ணீர் வடிந்துவிடும்படி வடிகால் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்துவந்தாலும், இன்னமும் கூட மழை தண்ணீர் தேங்கி மக்களை அவதிக்கு உள்ளாக்குகிறது. தண்ணீர் வடிய சில மணி நேரங்கள் ஆகிறது. அதற்குள் மீண்டும் மழை பெய்தால், மறுபடியும் தண்ணீர் தேங்குகிறது.
இது தொடர்பாக 'மழையில் மிதக்கும் சென்னை! தமிழக அரசின் உறுதிமொழிகள் தண்ணீரில் கரைந்த பரிதாபம்' என்ற தலைப்பில் நமது தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

