ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு
UPDATED : ஜன 18, 2024 08:59 PM
ADDED : ஜன 18, 2024 07:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
சென்னையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் சுரங்கப்பாதை அருகே பறக்கும் ரயில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் போது இரு தூண்களுக்கு இடையே உள்ள 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விரிவான விசாரண நடத்த தெற்கு ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.