sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,760 உயர்வு; 3 நாட்களில் மட்டும் ரூ.2,960 அதிகரிப்பு

/

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,760 உயர்வு; 3 நாட்களில் மட்டும் ரூ.2,960 அதிகரிப்பு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,760 உயர்வு; 3 நாட்களில் மட்டும் ரூ.2,960 அதிகரிப்பு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,760 உயர்வு; 3 நாட்களில் மட்டும் ரூ.2,960 அதிகரிப்பு


UPDATED : ஜன 12, 2026 09:59 AM

ADDED : ஜன 12, 2026 09:52 AM

Google News

UPDATED : ஜன 12, 2026 09:59 AM ADDED : ஜன 12, 2026 09:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்மூலம், கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.2,960 அதிகரித்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கான விலையை தங்கம் மற்றும் வெள்ளி எட்டியுள்ளன.

கடந்த வார இறுதியில் (ஜனவரி 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,760 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வார இறுதியின் 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்துள்ளது. இதன்மூலம், 3 நாட்களில் ரூ.2,960 அதிகரித்துள்ளது.

இதேபோல, வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.






      Dinamalar
      Follow us