தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது தங்கம் விலை; இரு தினங்களில் ரூ.1,040 சரிவு

தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது தங்கம் விலை; இரு தினங்களில் ரூ.1,040 சரிவு

தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது தங்கம் விலை; இரு தினங்களில் ரூ.1,040 சரிவு


ADDED : செப் 25, 2025 09:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 09:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 குறைந்து, ஒரு பவுன் ரூ.84,080க்கு விற்பனையாகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அண்மையில் இரு தினங்களில் மட்டும் 2,240 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. இதன்மூலம், தங்கம் விலை ரூ.85 ஆயிரத்தை கடந்து, வரலாறு காணாத வகையில் உச்சம் பெற்றது.

நேற்று ஆபரணத் தங்கம் விலை ரூ.320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.84,800க்கு விற்பனையாகியது. இந்த நிலையில், இன்று (செப் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ. 84,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.10,510க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.1040 குறைந்துள்ளது. அதேபோல, வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us