தாறுமாறாக உயரும் தங்கம் விலை; ஒவ்வொரு நாளும் புதிய உச்சம்!
தாறுமாறாக உயரும் தங்கம் விலை; ஒவ்வொரு நாளும் புதிய உச்சம்!
ADDED : அக் 30, 2024 10:22 AM

சென்னை; சென்னையில் வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ59,520 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ரூ. 56,400 ஆக ஒரு சவரன், ஆபரணத்தங்கத்தின் விலை இருந்தது. அதன் பின்னர் குறிப்பிட்ட இடைவேளையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. மாறி, மாறி தங்கத்தின் விலை காணப்பட்டதால் நகை பிரியர்கள் வெகுவாக அதிர்ச்சி அடைந்தனர்.
இந் நிலையில், பெண்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்றுள்ளது. ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து ரூ. 59,520 விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.65 அதிகரித்து, ரூ.7,440 ஆக உள்ளது.
இன்றுடன் சேர்த்து மொத்தம் 7 நாட்கள்(அக்.24 முதல் அக்.30) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை நிலவரம் கீழே தரப்பட்டு உள்ளது;
அக்.24 - ரூ.58,280
அக்.25 - ரூ.58,360
அக்.26 - ரூ. 58,880
அக்.27 - ரூ. 58,880
அக்.28 - ரூ. 58,520
அக்.29 - ரூ.59,000
அக்.30(இன்று) - ரூ. 59,520
இந்த மாதத்தில் ஒரே சீராக விலை உயர்ந்து காணப்பட்ட தங்கம் இன்றைய விலையின் மூலம் புதிய உச்சம் தொட்டு, ஒரு சவரன் ரூ.60,000 நோக்கி நகர்ந்திருப்பது, நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் தங்கத்தின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறி உள்ளனர்.