ஐந்து நீண்ட கால சிறை கைதிகளுக்கு சென்னை ஐகோர்ட் பரோல் நீட்டிப்பு
ஐந்து நீண்ட கால சிறை கைதிகளுக்கு சென்னை ஐகோர்ட் பரோல் நீட்டிப்பு
ADDED : ஜன 11, 2024 09:31 PM

சென்னை: 5 நீண்ட கால சிறை கைதிகளுக்கு மூன்று மாத பரோல் நீட்டிப்பு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
முன் விடுதலை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் ரமேஷ்சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நீண்ட காலம் சிறையில் உள்ள ஏ.எம்.பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது , விஜயன், பூரி கமல் ஆகியோருக்கு 3 மாத பரோல் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 13 கைதிகளுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது .
வழக்கமாக இவ்வாறு பரோல் விடுப்பு அளிக்கும் போது 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிக்கும் நிபந்தனையும் தளர்த்தப்பட்டு உள்ளது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 13 சிறைவாசிகளும் மாதம் ஒரு முறை காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நீண்ட கால சிறைவாசிகளின் கோரிக்கை குறித்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வாதத்தை எடுத்து வைத்ததை அடுத்து மேற்கண்ட சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.

