sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பல்கலை மாணவி பலாத்காரம்: போலீசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி

/

பல்கலை மாணவி பலாத்காரம்: போலீசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி

பல்கலை மாணவி பலாத்காரம்: போலீசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி

பல்கலை மாணவி பலாத்காரம்: போலீசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி

103


UPDATED : டிச 28, 2024 07:49 AM

ADDED : டிச 27, 2024 11:31 AM

Google News

UPDATED : டிச 28, 2024 07:49 AM ADDED : டிச 27, 2024 11:31 AM

103


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கு சராமரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.



சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் புகாரை அடுத்து, ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது அவருக்கு மாவுக்கட்டு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருடன் வேறு யாரேனும் இதில் தொடர்பு உடையவர்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் மாணவி பாலியல் வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் போலீசார் விசாரணை குறைபாடு இருப்பதாக தெரிகிறது. வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட போதிலும் sir என்ற சொல்லப்படும் நபர் யார், அவரது பின்னணி என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் என்பவர் கோர்ட்டில் முறையிட அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடிதத்தையே வழக்காக எடுத்துக் கொண்டு உள்ளது.

மேலும் இதன் மீது, உள்துறை செயலாளர், டி.ஜி.பி, மாநகர போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், முதல் தகவல் அறிக்கையை போலீசார் வெளியிடவில்லை. இணையதளத்தில் வெளியான உடன் அது முடக்கப்பட்டு விட்டது. வழக்கு தொடர்பான விரிவானஅறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும் எனக்கூறியுள்ளது.

இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள்: விசாரணையின் போது ஒருவர் தான் குற்றவாளி என போலீஸ் மிஷனர் எப்படி முடிவுக்கு வர முடியும். ஒரு வழக்கில் மட்டும் தான் ஞானசேகரனுக்கு தொடர்பு உள்ளது என எப்படி முடிவுக்கு வந்தார்.விசாரணை அதிகாரி கமிஷனருக்கு கீழ் பணிபுரிபவர். அவர் எப்படி மற்றொரு குற்றவாளியை கைது செய்வார்.எந்த விதிகளின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியும்.இதற்கு அரசிடம் அனுமதி வாங்கினாரா?காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டு உள்ளது.பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா.

காவல்துறை தரப்பு: போலீசார் துரத்தியபோது கீழே விழுந்ததால் காலில்பேண்டேஜ் போட்டு உள்ளார்.

தலைமை வழக்கறிஞர்: ஞானசேகரன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் அல்ல. குற்றம்நடந்த 3 நாளில் போலீசாரை பாராட்டாமல் சி.பி.ஐ., விசாரணை கேட்கின்றனர்.

நீதிபதிகள்: குற்றத்தை தடுக்க வேண்டியதும், குற்றவாளியை கைது செய்ய வேண்டியது போலீசாரின் கடமை. அதற்காக பாராட்ட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினர்

தொடர்ந்து நீதிபதிகள்: பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார்அளித்ததற்காக பாராட்டுகள். முதல்தகவல் அறிக்கை வெளியனதற்கு யார் பொறுப்பு? எப்படி கசிந்தது?

போலீசார்: முதல் தகவல் அறிக்கை கசியவில்லை. வெளியான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது

நீதிபதி: கசியவில்லை என்றால் ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நிர்பயா நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து பல்கலை அறிக்கை அளிக்க வேண்டும். மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை என்ன செய்தது. கல்வி நிறுவனங்களை நம்பித்தான் பெற்றோர் குழந்தைகளை அனுப்பி வைத்துள்ளனர். போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க சிறப்பு அதிரடிப்படையை அமைக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞர்: ஏற்கனவே சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

நீதிபதிகள்: அங்கு பெண்கள் சென்றிருக்கக்கூடாது. ஆண்களுடன் பேசக்கூடாது எனக் கூற யாருக்கும் உரிமையில்லை. பெண்களுக்கு முழு உரிமை உண்டு. காதல், பெண்களின் தனிப்பட்ட உரிமை எனக்கூறினர்.

மேலும் மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், கேள்விகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us