இனி 10% தள்ளுபடி காகித பயணச்சீட்டு இல்லை! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
இனி 10% தள்ளுபடி காகித பயணச்சீட்டு இல்லை! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
ADDED : பிப் 28, 2025 03:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 10 சதவீத தள்ளுபடியுடன் காகித குழு பயணச்சீட்டு வசதி வாபஸ் பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவுக்கு 10 சதவீத தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்ப பெறப்படுகிறது.
டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20 சதவீதம் தள்ளுபடி கட்டணத்துடன் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறி உள்ளது.