இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை; 12 மாவட்டங்களில் கனமழை! வானிலை அப்டேட்
இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை; 12 மாவட்டங்களில் கனமழை! வானிலை அப்டேட்
UPDATED : அக் 19, 2024 02:12 PM
ADDED : அக் 19, 2024 02:07 PM

சென்னை: தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழையும், 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவானது. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ததால் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறியது.
இந் நிலையில் திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ள வானிலை மையம், எந்த நாட்களில் எந்த மாவட்டத்தில் மழை பெய்யும் என்ற முழு விவரங்களையும் தெரிவித்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு;
மிக கனமழை
அக்.19 : திருப்பத்தூர், திருவண்ணாமலை
கனமழை
அக். 19 : காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி
அக். 20 : தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர்
அக். 21 : கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர்
அக்.22, 23: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.
அக். 24: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை
இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

