sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் எந்தெந்த ரூட்டில் போகலாம்? தெருவாரியாக பட்டியல் இதோ

/

சென்னையில் எந்தெந்த ரூட்டில் போகலாம்? தெருவாரியாக பட்டியல் இதோ

சென்னையில் எந்தெந்த ரூட்டில் போகலாம்? தெருவாரியாக பட்டியல் இதோ

சென்னையில் எந்தெந்த ரூட்டில் போகலாம்? தெருவாரியாக பட்டியல் இதோ

4


ADDED : அக் 16, 2024 07:54 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:54 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னையில் எந்த சாலைகளில் செல்லலாம், மூடப்பட்டு உள்ள சுரங்கப்பாதை விவரங்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் சின்னம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ள நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் போக்குவரத்தின் நிலை என்ன? எந்தெந்த சாலைகளில் மக்கள் தடையின்றி சென்று வரலாம், மூடப்பட்டு உள்ள சுரங்கப்பாதை பற்றிய விவரங்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு;

மழைநீர் தேங்கி உள்ளதன் காரணமாக மூடப்பட்டு உள்ள சுரங்கபாதைகள்:

1.பெரம்பூர் ரயில்வே

2.கணேசபுரம்

3.சுந்தரம் பாயிண்ட்

4.ரங்கராஜபுரம்

5.மேட்லி

6.MRTS

போக்குவரத்து மெதுவாக செல்லும் சாலைகளின் விவரம்;

MMDA ரசாக் கார்டன், போகன் வில்லா, மெட்டுக்குளம், நெற்குன்றம், K10 சந்தை, 70 அடி பெரவள்ளூர் பிஎஸ் சாலை, ஏசிரோடு புளியந்தோப்பு, ஸ்ட் ரெஹான்ஸ் சாலை, PH சாலை, ஆஞ்சநேயர் கோயில், மேட்டுப்பாளையம், தானா தெரு, அழகப்பா சாலை, ராஜா அண்ணாமலை சாலை, ரித்தர்டன் சாலை, ஈவேரா சாலை, குருசாமி பாலம், மில்லர்ஸ் சாலை, கொன்னூர் உயர்சாலை, ஷைலாம் தெரு, பி.எஸ்.சிவசாமி சாலை, நீலகிரி பாயிண்ட்(சிவசாமி சாலை நோக்கி), சுதந்திர தினபூங்கா முதல் நாகாஸ்,டாங்க் பங்க் சாலை, ஸ்டெர்ல்லிங் சாலை, ஹேடர்ஸ் U டர்ன் NH KH, பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி, பனகல் பார்க், வாணி மஹால், நாயர் சாலை, காளிம்மாள்கோயில் ரெட்டி தெரு, ஆர்டிஓ பாயிண்ட்(ஒருவழி பாதை), SRP டூல்ஸ், எம்ஜிஆர்சாலை, கந்தஞ்சாவடி.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகள்:

*மேட்லி சுரங்கப்பாதை(தெற்கு)-கண்ணம்மாபேட்டை-முத்துரங்கன் சாலை-17அடி சாலை-ரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

*பெரம்பூர் சுரங்கப்பாதை(வடக்கு)-முரசொலி மாறன் பாலம்

* சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் (தெற்கு)- வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் இருந்து நாகாஸ் நோக்கி வரும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லூரிக்கு திருப்பி விடப்படும்.

P.S.சிவசாமி சாலை:


*அமிர்தாஞ்சன் சந்திப்பு P.S.சிவசாமி சாலையை நோக்கி செல்லும் வாகனம் அனுமதிக்கப்படவில்லை. அமிர்தாஞ்சன் சந்திப்பு-லஸ் சர்ச் சாலை-இடது- டிஸ்லிவா சாலை-Dr.RK சாலை.

* P.S.சிவசாமி சாலை வட்டத்தில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்கு வாகனம் அனுமதிக்கப்படவில்லை.

* தீயணைப்புத்துறை 'E' ரோடு 'B' ரோடு வழியாக மேட்டுக்குப்பத்துக்கு இடையே இருபுறமும் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

* பெரம்பூர் பேரக் சாலையில இருந்து ரித்தர்டன் சாலையை நோக்கி செல்லும் வாகனம் அனுமதிக்கப்படவில்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைய ஈவிகே சம்பத் சாலை வழியாக செல்லலாம்.

* பெரம்பூர் பேரக் சாலையில் இருந்து ஈவிஆர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி, புரசைவாக்கம் சாலை வழியாக ஈவிஆர் சாலை அடையலாம்.






      Dinamalar
      Follow us