sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை சென்ட்ரலில் அமைகிறது புதிய லேண்ட்மார்க்; 27 மாடி பிரம்மாண்ட கட்டடத்தின் சிறப்பம்சங்கள் இதோ!

/

சென்னை சென்ட்ரலில் அமைகிறது புதிய லேண்ட்மார்க்; 27 மாடி பிரம்மாண்ட கட்டடத்தின் சிறப்பம்சங்கள் இதோ!

சென்னை சென்ட்ரலில் அமைகிறது புதிய லேண்ட்மார்க்; 27 மாடி பிரம்மாண்ட கட்டடத்தின் சிறப்பம்சங்கள் இதோ!

சென்னை சென்ட்ரலில் அமைகிறது புதிய லேண்ட்மார்க்; 27 மாடி பிரம்மாண்ட கட்டடத்தின் சிறப்பம்சங்கள் இதோ!

14


ADDED : ஜன 24, 2025 09:54 AM

Google News

ADDED : ஜன 24, 2025 09:54 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே, 27 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடம் கட்ட 349.99 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை என்றாலே மக்கள் மனதில் தோன்றுவது, சென்ட்ரல் ரயில் நிலையம் தான். இந்த ரயில் நிலையத்திற்கு எதிரே, 27 மாடிகளைக் கொண்ட பிரமாண்டமாக வளாகம் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த வளாகம் சென்னை மாநகரின் புதிய லேண்ட்மார்க் ஆக அமையும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டிட்கோ இணைந்து செயல்படுத்தியுள்ள மெட்ரோ ரயில் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், RGGGH மற்றும் பார்க் ரயில் நிலையம் போன்றவற்றை இணைக்க ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

* 3.5 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் உருவாக்கப்படும். மொத்தம் 27 மாடி கட்டடங்கள் கட்டப்படும்.

* முதல் இரண்டு தளங்களில் 40 விருந்தினர் தங்கும் வகையில், ஒரு ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. 150 விருந்தினர்களுக்கான பார் மற்றும் உணவகம் அமைக்கப்படும்.

* 250 கார்கள், 170 பைக்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி உருவாக்கப்படும்.

மாடிகள்- ப்ளான்கள்

1 டூ 4 தளம்- சில்லறை கடைகள், உணவு கடைகள் மற்றும் மல்டிபிளக்ஸ்,

5 டூ 24 தளம் -அலுவலகங்கள்

25- சேவை தளம்

26, 27 தளம்- விருந்தினர் அறைகள், பார் கொண்ட உணவகம், மண்டபம்

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நமது நகரத்தை உலகளவில் இணைக்கப்பட்ட நகர்ப்புற மையமாக மாற்றுவதற்கு இது மிகவும் தேவையான திட்டம் ஆகும். டோக்கியோ, நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் அடுக்குமாடி வணிக கட்டடங்கள் கட்டப்படும். இது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us