சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்
சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்
ADDED : ஏப் 22, 2025 12:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
சென்னை ராயபுரம் அருகே ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 3வது பெட்டியில் இரண்டு ஜோடி சக்கரம் தடம்புரண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். பின்னர் சக்கரங்களை சரிசெய்யும் பணிகளில் இறங்கினர்.
விபத்து எதிரொலியாக ராயபுரம்-சென்னை கடற்கரை நிறுத்தம் இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.