ஒரு சாம்பியனின் சாதனை! குகேஷின் ரூ.4 கோடி வரியை விட தோனியின் சம்பளம் குறைவு!
ஒரு சாம்பியனின் சாதனை! குகேஷின் ரூ.4 கோடி வரியை விட தோனியின் சம்பளம் குறைவு!
ADDED : டிச 17, 2024 09:59 AM

சென்னை: உலக செஸ் சாம்பியன் குகேஷ், தாம் பெற்ற பரிசுத் தொகைக்காக செலுத்திய வரி, தோனியின் ஐ.பி.எல்., சம்பளத்தை விட அதிகமாக உள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
சாதனை நாயகன் குகேஷுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குகேஷை பாராட்டி ரூ.5 கோடி ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்து கவுரவித்துள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஷிப் மூலம் குகேஷுக்கு கிடைக்கும் வருமானம் 11.34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தொகைக்கு அவர் செலுத்த வேண்டிய வரி ரூ.4.67 கோடியாகும்.
அதாவது ஐ.பி.எல்., சீசனின் நடப்பு தொடரில் தோனியின் சம்பளத்தை விட அதிகமாகும். தோனியின் சம்பளம் ரூ.4. கோடியாகும். ஆனால் அதை விட குகேஷுக்கு வரி அதிகம்.பொதுவாக, ரூ.5 கோடிக்கும் அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு 37 சதவீதம் கூடுதல் கட்டணம், 4 சதவீதம் சுகாதாரம் மற்றும் கல்வி வரி என மொத்தமாக 42 சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.