sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!

/

கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!

கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!

கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!

4


ADDED : டிச 28, 2025 07:45 AM

Google News

4

ADDED : டிச 28, 2025 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- சேதுராமன் சாத்தப்பன் -

நம் நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் 2050 அல்லது அதற்கு முன்பே கார்பன் சமநிலையை அடைய இலக்குகளை நிர்ணயித்துள்ளன. வரும் 2030க்குள் அடைய வேண்டிய நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி நகரும் நிலையில் மறுசுழற்சி பொருளாதார நடைமுறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கழிவுகளை குறைத்து பொருட்களை மீண்டும் பயன்படுத்தி மறுசுழற்சி செய்வதே இலக்கு; நம் நாட்டின் மறுசுழற்சி பொருளாதாரம் 2030க்குள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பை உருவாக்கக்கூடும். மென்மையான, அழகான தோளணி(ஸ்டோல்) மற்றும் சால்வைகள் கோழி இறகுகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்ட 'கோல்டன் பெதர்ஸ்' நிறுவனத்தை ராதேஷ் அக்ரஹாரி நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் இறைச்சிக்கடைகளில் இருந்து கிடைக்கும் கோழிக்கழிவுகளை துணி, காகிதம் மற்றும் பைகளாக மாற்றுகிறது. இந்த யோசனை இந்திய கைவினை மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் முதுகலைப் படிப்பு பயின்றபோது ராதேஷூக்கு உருவானது. ஒரு கிலோ கறிக்கோழியில் 350 கிராம் கழிவுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இயற்கை மறுசுழற்சி

கடந்த 2010ல் ஆய்வுகளைத் தொடங்கி கோழி இறகுகளை ரசாயனங்கள் இல்லாமல் சுத்திகரிக்கும் முறைகளை உருவாக்கினார். அமிலங்களுக்குப் பதிலாக நீராவி மற்றும் இயற்கை சோப்புகளை கொண்டு 27 படிகளைக் கொண்ட சுத்திகரிப்பு முறையை நிறுவனம் பின்பற்றுகிறது. பின் அந்த இறகுகள் நுால், காகிதம் மற்றும் கூழாக மாற்றப்படுகின்றன.

உள்ளூர் கசாப்புக் கடைகளிலிருந்து இறகுகளை சேகரிக்க துாய்மைப்பணியாளருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பழங்குடி பெண் கைவினைஞர்கள் இறகுகளை கவனமாகப் பிரித்து உயர்தரமான பொருட்களாக மாற்றுகின்றனர். இறகுகள் கழுத்து, இறக்கை, உடல், வால் என நான்கு வகைப்படுத்தப்படுகின்றன. வால் இறகுகள் துணி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உடல் இறகுகள், அச்சிடக்கூடிய வணிக காகிதத்தை உருவாக்குகின்றன. சாதாரண காகிதம் தயாரிக்க பல கிலோ மரங்கள் தேவையாக இருக்கின்றன. இந்நிறுவனம் பயன்படுத்துவதோ செல்லுலோஸ் இல்லாதது.

65 கிராம் எடையுள்ள ஒரு இறகு மப்ளர் மட்டும் 9 கிலோ கார்பன் வெளியீட்டை குறைக்கிறது. இந்த நிறுவனம் போர்வை, சால்வை, ஜாக்கெட், ஸ்டோல் மற்றும் மப்ளர்களை தயாரிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனம் 500 டன் கோழி கழிவுகளை மறுசுழற்சி செய்துள்ளது. ஆண்டுதோறும் 57,000 கிலோ இறகுகள் மீண்டும் பயன்பாட்டிற்கு மாற்றப்படுகின்றன.

இணையதளம்: https://goldenfeather.co.in/

மேலும் விபரங்களுக்கு இ-மெயில்: Sethuraman.sathappan@gmail.com, 98204 51259

இணையதளம்: www.startupandbusinessnews.com






      Dinamalar
      Follow us