பட்ஜெட்டில் கல்விக்கு 25 சதவீத நிதி ஒதுக்கீடு முதல்வர் ஆதிஷி சிங் பெருமிதம்
பட்ஜெட்டில் கல்விக்கு 25 சதவீத நிதி ஒதுக்கீடு முதல்வர் ஆதிஷி சிங் பெருமிதம்
ADDED : அக் 25, 2024 08:57 PM
புதுடில்லி:துவாரகா அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்துக்கு, முதல்வர் ஆதிஷி சிங் நேற்று அடிக்கல் நாட்டினார்.
துவாரகா 19வது செக்டாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டிய முதல்வர் ஆதிஷி சிங் பேசியதாவது:
இந்தப் புதிய கட்டடத்தில் 104 வகுப்பறைகள் அமைக்கப்படும். ஒரு ஆம்பி தியேட்டர், மூன்று நூலகங்கள் கட்டப்படும். கூடைப்பந்து மற்றும் பூப்பந்து மைதானங்கள் அமைக்கப்படும்.
கடந்த ஆட்சிக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள், மாணவர்களை தரையில் உட்கார வைப்பது மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தன. இதனால்தான் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க பெற்றோர் விரும்பவில்லை.
கடந்த 2015ம் ஆண்டில் டில்லியில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஐந்தடி அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் சர்வதேச தரத்தில் கல்வி வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் உறுதியுடன் செயல்படத் துவங்கினார்.
கடந்த 2015ம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சி மலர்ந்த பிறகுதான், டில்லி அரசில் கல்வித் துறைக்கான பட்ஜெட் இரு மடங்காக உயர்த்தப்பட்டது. மொத்த பட்ஜெட் தொகையில் 25 சதவீதம் கல்வித் துறைக்கே ஒதுக்கப்பட்டது.
நாட்டில் வேறு எந்த மாநில அரசும் கல்வித்துறைக்காக இவ்வளவு தொகையை செலவு செய்ததில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.