அமைச்சரவையில் மாற்றமா? எனக்கு தகவல் வரவில்லை என ஸ்டாலின் பதில்
அமைச்சரவையில் மாற்றமா? எனக்கு தகவல் வரவில்லை என ஸ்டாலின் பதில்
UPDATED : ஆக 22, 2024 12:28 PM
ADDED : ஆக 22, 2024 12:21 PM

சென்னை: அமைச்சரவையில் மாற்றம் என தகவல் வருகிறதே என்ற நிருபர்கள் கேள்விக்கு, 'எனக்கு தகவல் வரவில்லை' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும், இன்று (ஆகஸ்ட் 22) மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. அமைச்சரவையில் 3 புதியவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்றும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம் என்றும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஸ்டாலின் பதில்
இது தொடர்பாக, இன்று செய்தியாளர்கள், முதல்வர் ஸ்டாலினிடமே கேட்டனர். 'அமைச்சரவையில் மாற்றம் என தகவல் வருகிறதே' என்ற நிருபர் கேள்விக்கு, 'எனக்கு தகவல் வரவில்லை' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
மேலும் அவர், ' நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசின் விழா; அதை மாநில அரசு நடத்தியது. அமெரிக்காவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு உள்ளது. அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு, திரும்பிய பிறகு அதன் முடிவுகளை கூறுகிறேன்' என்றார்.