சென்னையில் முப்பெரும் விழா; தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டத்தில் முடிவு
சென்னையில் முப்பெரும் விழா; தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 16, 2024 11:46 AM

சென்னை: சென்னையில் தி.மு.க.,வின் முப்பெரும் விழா நடத்துவது உள்ளிட்ட 3 முக்கிய தீர்மானங்கள் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தி.மு.க.,வின் முப்பெரும் விழா உள்பட 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
2019 பார்லிமென்ட் தேர்தல் முதல் 2024ல் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தல் வரை தி.மு.க., கூட்டணி வெற்றி பெற பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.
தீர்மானம் 2
தி.மு.க.,வின் பவள விழா ஆண்டில் சென்னையில் முப்பெரும் விழா நடத்தப்படும். தி.மு.க., தொடங்கப்பட்ட நாளான செப்., 17ல் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விளக்க, தமிழகம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தப்படும்.
தீர்மானம் 3
'உறவுக்குக் கை கொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற அடிப்படையில் மாநில உரிமைகளைக் காத்திடுவோம். தமிழகத்திற்கென எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொண்டுள்ளது மத்திய அரசு.
பாரபட்சம் காட்டுவதை வழக்கமாக வைத்து, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

