அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!
UPDATED : ஜூலை 28, 2025 07:18 AM
ADDED : ஜூலை 27, 2025 11:13 AM

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், நேற்று (ஜூலை 27) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூன்று நாள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் முடிவில், இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி முதல்வர் ஸ்டாலினுக்கு பொருத்தப்பட்டது.
நேற்று (ஜூலை 27) மாலை அவர் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அவர் மூன்று நாள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உடன் வந்தனர் ஸ்டாலினை பார்க்க திமுக தொண்டர்கள் ஏராளமானோர் வழிநெடுகிலும் கூடினர்.
முதல்வர், முழுமையாக குணம் அடைந்துள்ளதாகவும், மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், வழக்கமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலம் பெற்று வீடு திரும்பினேன்
வீடு திரும்பிய ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது நலம் விசாரித்தஅனைவருக்கம் எனது நெஞ்சார்ந்த நன்றி. மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து,நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள்மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்.
உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.