ரூ.499 கோடியில் நான்குவழி சாலை, மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.499 கோடியில் நான்குவழி சாலை, மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ADDED : மே 30, 2025 12:37 AM

சென்னை:நெடுஞ்சாலைத் துறை சார்பில், 499 கோடி ரூபாய் மதிப்பில் அமைகப்பட்ட நான்குவழிச் சாலை மற்றும் புதிய மேம்பாலங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மல்லியக்கரை - ராசிபுரம், திருச்செங்கோடு - ஈரோடு சாலை, 424.38 கோடி ரூபாய் மதிப்பில் நான்குவழி சாலையாக மேம்படுத்தப்பட்டது
மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் ரயில்வே கடவிற்கு மாற்றாக, 68.38 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது
ராணிப்பேட்டை மேல்பாக்கத்தில், 6.32 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
மொத்தம், 499.08 கோடி ரூபாய் மதிப்பில் நடந்த இப்பணிகள் முடிவுற்ற நிலையில், தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 571.92 கோடி ரூபாய் மதிப்பிலான, 49 முடிவுற்ற பணிகளை, முதல்வர் திறந்து வைத்தார்
கடலுார் மேம்படுத்தப்பட்ட வெள்ளி கடற்கரை, கடலுார் சரவண நகர், முதுநகர் மண்டல அலுவலகங்கள்
காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சந்தை
ஓசூர் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் நவீன வணிக வளாகம், புதிய மீன் மார்க்கெட், கும்பகோணம் அறிவுசார் மையம், புதுக்கோட்டை தினசரி அங்காடி, சேலம் அல்லிக்குட்டை ஏரி புதுப்பிப்பு
திருப்பூர், சங்கிலிபள்ளம் ஓடையில் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட 19 முடிவுற்ற பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.