ADDED : ஜூன் 29, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க.,வை வீழ்த்த, ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தி.மு.க.,வை வீழ்த்துவதற்காக, அவர் உருவாக்கிய கூட்டணி சிறப்பாக தொடர வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்ற நினைக்கும் கட்சிகள் அனைத்தும் எங்களுடன் இணைந்து, கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியமைக்கும் என ஏற்கனவே அவர் சொன்னதைத்தான், தே.ஜ., கூட்டணி ஆட்சி என திரும்பவும் கூறி இருக்கிறார். தே.ஜ., கூட்டணியில் இருக்கும் நாங்கள், இடையூறு ஏற்படுத்தும் விதமாக கருத்து கூறுவது நாகரிகம் கிடையாது. வரும் 2026 மட்டுமல்ல; 2031, 2036லும் தி.மு.க., ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கனவு காண்கிறார்.
- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்