மாநில திருநங்கையர் கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
மாநில திருநங்கையர் கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஆக 01, 2025 12:52 AM
ADDED : ஜூலை 31, 2025 11:40 PM

சென்னை:சமூக நலத்துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட, 'தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை - 2025'ஐ, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
திருநங்கையர் நல வாரியம் வழியாக அடையாள அட்டை வழங்குவது முதல் , சுய வேலைவாய்ப்புக்கான நிதியுதவி வரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
சமூகத்தில் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு வந்த இச்சமூகத்திற்கு இன்னும் ஆழமான கட்டமைக்கப்பட்ட மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்து, 'தமிழ் நாடு மாநில திருநங்கையர் கொள்கை - 2025' வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது, தமிழகத்தில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைநிலை பாலினத்தவர்களின் சமூக ஒருங்கிணைப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொள்கை வெளியீடு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், தலைமை செயலர் முருகானந்தம், சமூக நலத்து றை செயலர் ஜெயஸ்ரீ முரளி தரன் கலந்து கொண்டனர்.
கண்காணிப்பு தி ருநங்கையர் நல வாரியம், மாநில அளவில் ஆலோ சனை அமைப்பாகவும், பல் வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பாகவும் செயல்படும்
அரசு தலைமை செயலர் தலைமையில் அமைக்கப்படும் உயர்மட்டக் குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, திருநங்கையருக்கான திட்டங்கள், சட்டங்களை உருவாக்குவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்கும்
மாவட்டங்களில், கலெக் டர் தலைமையிலான கண்காணிப்பு குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி, திருநங்கையர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவர்களின் குறைகளை களைய, குறை தீர்வு கூட்டம் நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்
தி ருநங்கையர் சமுதாயத்திற்கு பங்களிக்க தயாரான முழுமையான குடிமக் கள். அவர்களை நம்மோடு ஒப்பாக வாழ வைப்பது, நம் அரசின் கடமை என்பதை இந்த கொள்கை வலியுறுத்துகிறது.