அமெரிக்க வரி சிக்கலுக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
அமெரிக்க வரி சிக்கலுக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2025 08:05 AM

சென்னை: அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் களைய நடவடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் களைய நடவடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வரி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா இந்தியா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனால் ஜவுளி துறை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

