திருச்சி திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் முகாம்
திருச்சி திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் முகாம்
ADDED : ஜூலை 03, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், வரும் 8 மற்றும் 9ம் தேதி நடக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் அவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்.
இதை தொடர்ந்து, வரும் 8ம் தேதி திருச்சியில் நடக்கவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்க உள்ளார். 9ம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் நடக்கும் சிறுபான்மையினர் கல்லுாரி விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.